JSM Shop Management
உருவாக்கத்தில் உள்ளதுவணிக நிர்வாக மற்றும் ERP தளம்
கையிருப்பு, விற்பனை மற்றும் அன்றாடக் கடைச் செயற்பாடுகளை ஒரே முறைமையில் ஒருங்கிணைக்கும் வணிக நிர்வாகத் தளம்.
- வணிக மென்பொருள்
- இணையப் பயன்பாடு
சேவைகள்
ஆயத்த மென்பொருள்கள், உங்கள் குழு செயற்படும் விதத்தை மாற்றுமாறு கோருகின்றன. தனிப்பயன் மென்பொருள், உங்கள் வணிகம் ஏற்கெனவே செயற்படும் விதத்திலேயே செயற்படுகிறது. மீண்டும் மீண்டும் செய்யவேண்டிய நிர்வாகப் பணிகளைக் குறைத்து, உங்கள் செயற்பாடுகள் பற்றிய தெளிவான பார்வையை வழங்கும் நிர்வாக முறைமைகள், கட்டுப்பாட்டுப் பலகைகள் மற்றும் உள்ளகக் கருவிகளை நாங்கள் உருவாக்குகிறோம்.
உங்கள் வணிகம் தற்போது செயற்படும் விதத்தையும், நேரமும் துல்லியமும் இழக்கப்படும் இடங்களையும் வரைபடமாக்குகிறோம்.
உங்கள் உண்மையான பணிச்செயல்முறைகள், வகிபாகங்கள் மற்றும் அறிக்கைகளை மையமாகக் கொண்டு முறைமையை வடிவமைக்கிறோம்.
கட்டங்கட்டமாக உருவாக்குகிறோம்; இதனால் செயற்படும் வசதிகள் தயாராகும்போதே அவற்றை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
இணக்கம் காணப்பட்டவாறு தரவுகளை இடமாற்றம் செய்து, முறைமையை ஒப்படைப்பதுடன், உங்கள் தேவைகள் வளரும்போது அதற்கு ஆதரவளிக்க முடியும்.
வணிக நிர்வாக மற்றும் ERP தளம்
கையிருப்பு, விற்பனை மற்றும் அன்றாடக் கடைச் செயற்பாடுகளை ஒரே முறைமையில் ஒருங்கிணைக்கும் வணிக நிர்வாகத் தளம்.
ஆயத்தக் கருவிகள் மாற்றுவழிகளைப் பின்பற்றுமாறு உங்களைக் கட்டாயப்படுத்தினால், அல்லது முக்கிய செயல்முறைகள் இன்னும் விரிதாள்களிலேயே இருந்தால், தனிப்பயன் மென்பொருள் பற்றிக் கருத்திற்கொள்வது பயனுள்ளதாக இருக்கலாம். கண்டறிதல் கட்டத்தில் எமது நேர்மையான கருத்தை வழங்குவோம்.
பொதுவாக, ஆம். தரவு இடமாற்றம் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பின், புதிய முறைமை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் அதனைத் திட்டமிட்டுச் சோதிக்கிறோம்.
உங்களுக்குத் தேவையானதை எமக்குத் தெரிவியுங்கள்; உங்களுக்கேற்ற விலை மதிப்பீட்டுடன் உங்களைத் தொடர்புகொள்வோம்.
தனியுரிமை அறிவிப்பு தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.